பொன்னேரி ஸ்ரீதேவி கல்லூரி பட்டமளிப்பு விழா


பொன்னேரி ஸ்ரீதேவி கல்லூரி பட்டமளிப்பு விழா
x

பொன்னேரி ஸ்ரீதேவி கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

திருவள்ளூர்

பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஸ்ரீதேவி கல்வி நிறுவனத்தின் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பட்ட படிப்பு படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நர்சிங் கல்லூரி நிர்வாகி ரமா அனைவரையும் வரவேற்றார்.

இந்த பட்டமளிப்பு விழாவிற்கு சத்திய சாயி கல்லூரி முதல்வர் டாக்டர் ஹெலன்ஷாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று 47 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் டாக்டர் அனிதா நன்றி கூறினார்.


Next Story