பொன்னியம்மன், படவேட்டம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா
பொன்னியம்மன், படவேட்டம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா நடந்தது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த வன்னிய மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் மற்றும் படவேட்டம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மங்களவாத்திடங்களுடன் பக்தர்கல் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பொன்னியம்மன், படவேட்டம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பால்குட ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் காளி வேடமிட்டு நடனமாடியபடி சென்றார்.
Related Tags :
Next Story