பொன்வாசிநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்


பொன்வாசிநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
x

பொன்வாசிநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோவிலில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி உற்சவ பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பொன்வாசிநாதர், சொர்ணாம்பிகை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு கொடிமரத்திற்கு நடந்த சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று முதல் தினசரி காலை, மாலை பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், மண்டகப்படிதாரர்களின் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. வருகிற 30-ந்தேதி திருக்கல்யாணமும், மே 2-ந்தேதி தேரோட்டமும், 3-ந்தேதி மாலை தீர்த்தவாரியும் நடக்கிறது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story
  • chat