பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
சனி பிரதோஷம்
நாமக்கல் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் நேற்று சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் தட்டார தெருவில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன், வள்ளிபுரம் ஈஸ்வரன் கோவில், புத்தூர் ஈஸ்வரன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நேற்று மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது.
நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டி குபேர ஈஸ்வரர் கோவிலில் சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மலர் அலங்காரம்
மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக காலை நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மோகனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு, சாமிதரிசனம் செய்தனர்.
பக்தர்கள் தரிசனம்
பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்க விஸ்வேஸ்வரர் கோவில்களில் சிவ பெருமான், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.