கோடியூர் கிராமத்தில் ரூ.7 லட்சத்தில் சிறுபாலம் அமைக்க பூமிபூஜை-ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
தர்மபுரி
பென்னாகரம்:
பென்னாகரத்தை அடுத்த கோடியூர் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.6 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் சிறுபாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா, பா.ம.க. மாநில பொது குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன், அரசு பொறியாளர் அரவிந்த் முருகன், பா.ம.க. மாவட்ட தலைவர் செல்வகுமார், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சுமித்ரா, ஒப்பந்ததாரர் வடிவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story