மோகனூர் ஒன்றியத்தில் ரூ.2¾ கோடியில் சாலை பணிக்கு பூமிபூஜை-ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


மோகனூர் ஒன்றியத்தில் ரூ.2¾ கோடியில் சாலை பணிக்கு பூமிபூஜை-ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் ஒன்றியத்தில் ரூ.2 கோடியே 84 லட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் கணவாய்பட்டி முதல் தொட்டிப்பட்டி வரை தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது. மோகனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவலடி தலைமை தாங்கினார். நாமக்கல் சட்டசபை உறுப்பினர் ராமலிங்கம் பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அணியாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ராமலிங்கம் எம்.எல்.ஏ. தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், பானகம், தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்றை வழங்கினார். இதையடுத்து பரளி, அரூர், கொமரிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் ஓய்வறைகளை திறந்து வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் நவலடி, பழனிவேல், நிர்வாகி கருமண்ணன், லத்துவாடி ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி ரஜினி ஜெயன், அணியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story