சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் பாலாலய பூஜை


சுந்தரமூர்த்தி நாயனார் கோவில்  பாலாலய பூஜை
x

சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் பாலாலய பூஜை

திருப்பூர்

அவினாசி

அவினாசியில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இதன் உபகோவிலான பழமையான சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் தாமரை குளக்கரையில் உள்ளது. இந்த கோவில் தரை, மேல்தளம், சுற்றுச்சுவர் அனைத்தும் மிகவும் பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்தது. இந்த கோவிலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று மாலை 6.30 மணியளவில் கோவில் சிவாச்சார்யார்கள் ஹோமகுண்டம் நடத்தி சிறப்பு வழிபாடுகள் செய்தனர். பின்னர் சுவாமி பாலாலயம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டி, தொழில் அதிபர் பொன்னுசாமி உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.



Next Story