சங்கடஹர சதுர்த்தியையொட்டி சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை


சங்கடஹர சதுர்த்தியையொட்டி  சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கடஹர சதுர்த்தியையொட்டி சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி

சங்கடஹர சதுர்த்தியையொட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில் நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு 608 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு மகா தீபாராதனைகளுடன் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டன.

இதேபோல் கிருஷ்ணகிரி காந்திசாலை வர சித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம், வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதி சக்தி விநாயகர் கோவில் என பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


Next Story