திரவுபதியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
திரவுபதியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
திருச்சி
கல்லக்குடி, ஜூலை.9-
புள்ளம்பாடி ஒன்றியம் எம்.கண்ணனூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பூக்குழி திரு விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விழா கொண்டாடப்படவில்லை. இந்தநிலையில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இந்த ஆண்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூக்குழி இறங்கினர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு கிராமத்தின் முக்கியவீதிகளில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம கரைக்காரர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story