சுகாதார குறைபாடு; உணவகத்துக்கு அபராதம்
நெல்லையில் சுகாதார குறைபாடு காணப்பட்ட உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், நேற்று சங்கர்நகர் மற்றும் பாளையங்கோட்டை பகுதியிலுள்ள சைவ உணவகங்களில் உணவு பதார்த்தங்களுடன் வழங்கப்படும் சட்னி வகைகள் மற்றும் அசைவ உணவகங்களில் விற்பனை செய்யப்படும் ஷவர்மா ஆகியவை உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கிணங்க தரமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என திடீர் சோதனை செய்தார். அப்போது, 2 கடைகளில் உணவுப்பொருட்களை பொதிவதற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்கள் கொம்பையா, முருகன் ஆகியோருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சங்கர்நகரிலுள்ள ஒரு உணவகத்தில், உணவு தயாரிக்குமிடம் சுகாதார குறைவாக காணப்பட்டதால், அந்த உணவக உரிமையாளரான முருகனுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story