முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
வாசுதேவநல்லூர்:
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மனுக்கு ஆவணி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று. 7 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு அருள் வாக்கு, இரவு 7 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம் உள்பட 21 நறுமண பொருட்கள் மற்றும் உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் மற்றும் முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சந்தன காப்பு, அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 9 மணி அளவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.