பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்
x

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல் பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ. 68.62 லட்சம் மதிப்பிலான வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அதேபோல் இந்த அமைப்போடு தொடர்புடைய ரிஹாப் இந்தியா என்ற அமைப்பின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் 23 கணக்குகள், ரிஹாப் இந்தியா பவுன்டேசன் அமைப்பின் 10 கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.


Next Story