மக்கள் தொகை விழிப்புணர்வு ஊர்வலம்


மக்கள் தொகை விழிப்புணர்வு ஊர்வலம்
x

வேலூரில் மக்கள் தொகை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

வேலூர்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி வேலூர் மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று நடந்தது. ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிமேகலை (குடும்பநலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்து நடந்து சென்றார்.

ஊர்வலம் அண்ணா கலையரங்கம் அருகே இருந்து புறப்பட்டு அண்ணா சாலை, மக்கான் சிக்னல் வழியாக டவுன் ஹால் அருகே நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டு 'சிறு குடும்பம், சிறப்பான குடும்பம், 'பொறுப்புகளை நிறைவேற்ற திட்டம் இடுங்கள்' என்பது உள்பட பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதில் வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில், மாநகர நலஅலுவலர் முருகன் (பொறுப்பு) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story