மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி


மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மருத்துவம், ஊரக நலப்பணிகள், குடும்ப நலத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:- மக்கள் தொகையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.

உலக அளவில் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் தொகையும், பொருளாதார வளர்ச்சியும் இணையாக இருந்தால்தான் அங்கு மக்கள் வசதிகளுடன் வாழ முடியும். அந்த வகையில் நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சி நடுநிலையில்தான் இருந்து வருகிறது. அதற்கேற்ப மக்கள் தொகை இருக்க வேண்டும். குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்றால் அந்த குடும்பத்தின் பொருளாதாரம் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதற்கு சிரமம் ஏற்படுகிறது என்றார். தொடர்ந்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் நினைவு பரிசினை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் செந்தில்குமார், மருத்துவம் ஊரக நலப்பணிகள் குடும்ப நலம் துணை இயக்குனர் சிவானந்தவல்லி, கண்காணிப்பாளர் மலர்வண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ்குமார், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் பார்த்திபன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப்குமார், டாக்டர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story