விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
விருகல்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முறைகேடு புகார்
குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி புதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. விருகல்பட்டிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பழையூர், விருகல்பட்டி புதூர் மரிக்கந்தை வல்லகுன்டாபுரம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பயிர் கடன் பெற்று திரும்பிய செலுத்திய பணத்தை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்காமல் முறையாக ரசீது கொடுக்காமலும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனைத்தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். விசாரணை முடிந்த நிலையில் விசாரணை அறிக்கையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுகடன் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க கோரியயும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
இந்நிலையில் நேற்று ஏராளமான விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் "விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தியும் செலுத்தப்பட்ட பணங்களுக்கு உரிய ரசீது கொடுக்கப்படவில்லை விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ரசிது வழங்காமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும்
முறைகேடு செய்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பணத்தை திருப்பித் தர வேண்டும்" என்று கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரன் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதை ஏற்றுக்கொள்ளாததால் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.