விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்


விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்
x
திருப்பூர்


விருகல்பட்டி புதூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விவசாயிகளுக்கு பயிர் கடன் திரும்ப வழங்க கோரியும் விவசாயிகள் தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முறைகேடு புகார்

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விருகல்பட்டிபுதூர் கிராமத்தில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் திரும்ப வழங்குவதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கூட்டுறவு சங்கசெயலாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்த 8 மாதங்களாக காலதாமதம் செய்து விவசாயிகளுக்கு பயிர் கடன் மீண்டும் வழங்குவதிலும் முறையாக பயிர் கடனை திரும்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு ரசீது வழங்காமல் தொடர்ந்து அலைக்கழித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் கடனை உடனடியாக திரும்ப வழங்கக் கோரியும், முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் மற்றும் அவருடைய உதவியாளர் மீது மேற்கொண்ட விசாரணை குறித்த அறிக்கையை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்க கோரியும் கடந்த 14-ந் தேதிமுதல் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தொடர் போராட்டம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

விவசாயிகளை சந்தித்து பேசிய கூட்டுறவு துறை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் குறைகளை நேரடியாக கேட்டு அறியாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதனை கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) திருப்பூர்மாவட்ட கலெக்டர் அலுவலகம்முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகளும், சங்க நிர்வாகிகளும் பயிர் கடனை திரும்ப வழங்கும் வரையிலும் விசாரணை அறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கும் வரையிலும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story