வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
x
திருப்பூர்

வருவாய்த்துறை அலுவலர்கள்

காத்திருப்பு போராட்டம்

ஐகோர்ட்டு உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ் முனியன் என்பவரை மாவட்ட கலெக்டர் பணியிடை நீக்கம் செய்து உத்திரவிட்டதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று காலை முதல் மாலை வரையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு பணி நீக்கம் செய்யப்பட்ட தாசில்தாருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story