தேங்காய் உடைக்கும் போராட்டம்


தேங்காய் உடைக்கும் போராட்டம்
x
திருப்பூர்


தென்னையில் இருந்து கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். தேங்காய் பருப்புக்கு கிலோ 150 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணிசார்பில் அவினாசி புதிய பஸ் நிலையம் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு விவசாய சங்க அவினாசி வட்டார தலைவர் எம்.வேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் பா.ஜனதா மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், வேலூர் இப்ரஹிம், அ.தி.மு.க. அவினாசி ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், அத்திக்கடவு-அவினாசி குழு பொறுப்பாளர்கள் சுப்பிரமணியம், சம்பத், கொங்கு பொண்ணு குட்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் வேளாண் துறை அமைச்சருக்கு பாய், தலையணையை அனுப்புவதற்காக பா.ஜனதா நிர்வாகிகளிடம் பாய், தலையணை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.


Next Story