சார் பதிவாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம்


சார் பதிவாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
x
திருப்பூர்


வக்பு வாரிய நிலமென கூறி பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையாணையை நீக்க கோரி சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

முற்றுைக போராட்டம்

ஊத்துக்குளி தாலுகா வடுகபாளையம் கிராமத்தில் சிறுஇனாம் ஒழிப்பு சட்டப்படி பட்டா பெற்று முறைப்படி ஆவணங்கள் வைத்து அனுபவித்து வரும் நிலங்களை வக்பு வாரிய நிலமான கூறி பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையாணையை நீக்க கோரி பாதிக்கப்பட்ட அடிமனை பயனாளிகள், வீட்டு உரிமையாளர்கள், நில உரிமையாளர்கள் ஊத்துக்குளி சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

ஊத்துக்குளி ராமமூர்த்தி நகர் நில மீட்பு இயக்கம், திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் வடுகபாளையம் கிராமம் கே.கே நகர், செந்தில் நகர், சரஸ்வதி நகர், மகாலட்சுமி நகர் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், ஆடிட்டர் கோபால், குழந்தைசாமி, பெரியசாமி ஆகியோர் உரையாற்றினார்கள்.ஊத்துக்குளி பேரூராட்சி துணை தலைவர் சரவணன், பேரூராட்சி கவுன்சிலர் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

முன்னதாக காலை 10.30 மணியளவில் ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புறப்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்தை நோக்கி சென்றபோது வேப்பமரம் பஸ்நிறுத்தம் அருகில் காவல்துறை தடுத்து நிறுத்தினார்கள். அங்கேயே சாலையில் அமைந்து கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தையடுத்து ஊத்துக்குளி தாசில்தார் தங்கவேல் தலைமையில் ஊத்துக்குளி சார் பதிவாளர் இளவரசன், காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் அடுத்த இரண்டு தினங்களுக்குள் உரிய தேதியை முடிவு செய்து திருப்பூர் சார் ஆட்சியர் தலைமையில் வக்ப்போர்டு அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.இதை ஏற்று போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

1 More update

Next Story