தீண்டாமை சுவரை அகற்றக் கோரி போராட்டம்
பெருமாநல்லூர் அருகே முட்டியங்கிணறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பெருமாநல்லூர் நான்கு வழி சாலை சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறியதாவது:-
ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட முட்டியங்கிணறு ஆதிதிராவிடர் காலனியையொட்டி தனியார் வீட்டுமனை பிரிவு அமைத்து தீண்டாமை சுவரை ஏற்படுத்தியுள்ளனர். இச்சுவற்றை ஒட்டிய பகுதியில் சாக்கடை நீர் வெளியேறுவதால் 18-க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் நவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே உடனடியாக தீண்டாமை சுவற்றை அகற்ற வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும். என்றனர்.
போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் ஏ.பி.ஆர். மூர்த்தி, தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது பற்றி தகவலறிந்து வந்த பெருமாநல்லூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பான விசாரணை 7-ந் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றன