கள்ளக்குறிச்சி தபால் நிலையத்தில்தங்க பத்திரம் விற்பனை முதலீடு நாளை முதல் தொடங்குகிறதுஅதிகாரி தகவல்


கள்ளக்குறிச்சி தபால் நிலையத்தில்தங்க பத்திரம் விற்பனை முதலீடு நாளை முதல் தொடங்குகிறதுஅதிகாரி தகவல்
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி தபால் நிலையத்தில் தங்க பத்திரம் விற்பனை முதலீடு நாளை முதல் தொடங்குகிறது என்று அதிகாரி தொிவித்தாா்.

கள்ளக்குறிச்சி


விருத்தாச்சலம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய 2 தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களில் இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க பத்திரம் முதலீடு திட்ட விற்பனை நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.

நேரடி தங்கத்தை கிராம் கணக்கில் வாங்குவது போல தங்க பத்திரத்தில் முதலீடு செய்ய முடியும், முதலீடு செய்த பணத்தின் மதிப்பு சந்தை விலைக்கு ஏற்றவாறு அதிகரிக்கும் ஒரு கிராம் விலை ரூ.5923 (24 கேரட்) தனிநபர் 1 கிராம் முதல் 4 கிலோ வரை தங்கபத்திரத்தில் முதலீடு செய்யலாம்.

தொண்டு நிறுவனங்கள் நிதியாண்டிற்கு 20 கிலோ வரை வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். முதலீட்டாளருக்கு தேவை இருப்பின் 5 முதல் 7 ஆண்டுகளில் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம்.

முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் .இந்த வட்டி தொகை 6 மாதத்திற்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளும் வசதியும், தங்க பத்திரத்தின் பேரில் வங்கிகளில் கடன் பெறும் வசதியும் உள்ளது. நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே தங்க பத்திர விற்பனை நடைபெறும்.

எனவே பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிறப்பு தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story