தபால்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் தபால்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருநெல்வேலி
தேசிய தபால் ஊழியர் சம்மேளனம், தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம் அஞ்சல் பொருள் கிடங்கு ஊழியர்கள் மற்றும் தபால்துறை கூட்டு போராட்ட குழுவினர் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கூட்டு போராட்ட குழுவின் தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். கன்வீனரும் மாநில துணைச்செயலாளருமான ஜேக்கப்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தபால்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஆரோக்கிய வளர்மதி, முத்துப்பேச்சி, முத்துலட்சுமி, கற்பகம், மலர்விழி, கலாதேவி, சங்கர், நாகராஜ், துளசிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story