தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்


தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்
x

ராமநாதபுரத்தில், 28-ந் தேதி தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அஞ்சலக கோட்டத்தில் மாவட்ட அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் வருகின்ற 28-ந் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. ராமநாதபுரம் அரண்மனை ராமலிங்க விலாசம் எதிரில் அமைந்துள்ள அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த குறைதீர்க்கும் முகாமிற்கு குறைகள் தொடர்பான மனுக்களை வருகிற 27-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம் அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகாராக இருந்தால் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஆகியவற்றை புகாருடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட குறைதீர்க்கும் முகாமிற்கு ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய பதிலால் திருப்தியடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் இந்த முகாமில் எடுக்கப்படமாட்டாது. மேலும் தனியார் கூரியரில் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story