தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி


தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இல்லந்தோறும் மூவர்ணக்கொடி ஏற்றக்கோரி தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை வீடுகள் தோறும் மூவர்ணக்கொடி ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை நடந்து வருகிறது. கன்னியாகுமரி தபால் கோட்டத்தில் இதுவரை 9 ஆயிரம் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் "இல்லந்தோறும் மூவர்ணக் கொடி" என்னும் விழிப்புணர்வை உண்டாக்கிட நேற்று காலை கன்னியாகுமரி தபால் கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பிருந்து தொடங்கிய இந்த பேரணியை கன்னியாகுமரி கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் சிவாஜி கணேஷ் மற்றும் நாகர்கோவில் தலைமை தபால் நிலைய முதுநிலை தபால் அதிகாரி மாரியப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கோட்ட உதவி தபால் கண்காணிப்பாளர்கள் பரமேஸ்வரன், சுயம்புகலா, தபால் ஆய்வாளர் கண்மணி மற்றும் 50-க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் "இல்லந்தோறும் மூவர்ணக்கொடி" விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.


Next Story