தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கமலேஷ் சந்திரா கமிட்டியில் ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு சாதகமான பரிந்துரைகளின் மீது அரசும், அஞ்சல் வாரியமும் இறுதி முடிவு எடுக்க வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்களுக்கு 3 கட்ட பதவி உயர்வுகள், பணிக்கொடை ரூ.5 லட்சம், காப்பீடு ரூ.5 லட்சம் உள்ளிட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஞானபாலசிங் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் ஜேக்கப், முருகேசன், மூக்கன், கணபதி, சின்னதம்பி, ராமமூர்த்தி, சிவசாமி, மரிய அனுசுயா, அழகு, பீமாராவ், பத்மநாபன், லட்சுமணசாமி உள்பட திரளான தபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story