தபால் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்
தபால் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை
காரைக்குடி,
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. காரைக்குடி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மகா சம்மேளன முன்னாள் செயலாளா் செல்வராஜ் தலைமை தாங்கினார். அஞ்சல் துறையைச் சேர்ந்த ரமேஷ், ராஜகோபால், செயலா் முருகன், தலைவா் சிவக்குமாா், தர்மலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினாா். இதில் தபால் ஊழியர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story