விருத்தாசலத்தில்அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலத்தில்அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விருத்தாசலத்தில் அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்


விருத்தாசலம்,

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் விருத்தாசலம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 12, 24, 36 என்ற மூன்று கட்ட பதவி உயர்வுகளை வழங்கிட வேண்டும். ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு லாக்கா அந்தஸ்து வழங்க வேண்டும். 180 நாட்கள் விடுப்பை சேமித்து பணி நிறைவின்போது பணமாக வழங்கிட வேண்டும். பணிக்கொடை குரூப் இன்சூரன்ஸ் ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். மாநில உதவி பொருளாளர் விஷ்ணு விஜயன் முன்னிலை வகித்தார். கோட்ட பொருளாளர் ஏழுமலை, கோட்ட முன்னாள் துணைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் தபால் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story