எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள்
வேடசந்தூர் நகர் பகுதியில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
திண்டுக்கல்
வேடசந்தூர் நகர் பகுதியில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. உண்மை தொண்டர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்து மூலம் பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. வேடசந்தூர் பகுதியில் இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே ஊராட்சி ஒன்றிய கட்டிடம் உள்ளிட்ட அரசு சுவர்களில் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக, வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story