ஆழ்கடல் தன்மை குறித்த பட்டய படிப்பு


ஆழ்கடல் தன்மை குறித்த பட்டய படிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:46 PM GMT)

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆழ்கடல் தன்மை குறித்த பட்டய படிப்பு தொடங்கப்பட்டது

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி டெம்பிள் அட்வென்ஜர்ஸ் ஸ்கூபா டைவிங் அகாடமி என்னும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி அழகப்பா பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறை மாணவர்கள் தங்கள் முதுகலை பட்டப்படிப்புடன் கூடுதலாக ஸ்கூபா டைவிங் முதுகலை பட்டய படிப்பையும் மேற்கொள்ள முடியும். இந்த பயிற்சியின் மூலம் ஆழ்கடலின் தன்மை, கடல்வாழ் உயிர்களின் வாழ்வியல் மற்றும் சுற்றுசூழல் மாசுபாட்டை கண்டறிவதற்கும், அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்களான கடல் பசு, கடல் ஆமை, கடற் குதிரை ஆகியவற்றை பாதுகாக்கவும் பவளப்பாறைகள் மற்றும் அவற்றை சார்ந்த கடல்வாழ் உயிரினங்களின் பாதிப்பு பற்றியும் அறிந்துகொள்ள மற்றும் தொல்லியல் துறை சார்ந்த கடல்சார் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு ஆழ்கடல் பயிற்சி பயனுள்ளதாக அமையும்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி முன்னிலையில், பதிவாளர் ராஜமோகன் மற்றும் புதுச்சேரி டெம்பிள் அட்வென்ஜர்சின் நிறுவனர் அரவிந்த் தருண் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறை தலைவர் பேராசிரியர் ரவிக்குமார் நிகழ்சியில் கலந்து கொண்டார்.


Next Story