பா.ஜனதா ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு-பேச்சுவார்த்தையில் உடன்பாடு


பா.ஜனதா ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு-பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x

ராதாபுரத்தில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த தலைமையிடத்து சர்வேயரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, வள்ளியூர் வடக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில், கடந்த 8-ந்தேதி ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன்பின்னர் பா.ஜனதா சார்பில் தலைமையிடத்து சர்வேயரை பணி இடைநீக்கம் செய்யக்கோரி 22-ந்தேதி (அதாவது இன்று) ராதாபுரம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஏசுதாசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட சர்வேயர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். வருகிற 30-ந்தேதிக்கு பிறகு புதிய தலைமையிடத்து சர்வேயர் பணிக்கு வருவார் என கூறினார். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இன்று நடக்க இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, ராதாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம், பா.ஜனதா மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், பா.ஜனதா ஊடக பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கும்பிளம்பாடு செல்வகுமார், வக்கீல் பிரிவு மாவட்ட துணை தலைவர் ராம்நாத் அய்யர், வள்ளியூர் வடக்கு ஒன்றிய தலைவர் அருள் ஜெகரூபர்ட், ராதாபுரம் தெற்கு ஒன்றிய தலைவர் கேசவன், வள்ளியூர் வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர்கள் மணிகண்டன், ஜெயசெந்தில்குமார், ஆச்சூர் பரமசிவன், பொருளாளர் முருகேசன், இளைஞர் அணி உதயகுமார், ராதாபுரம் தெற்கு ஒன்றிய ஊடக பிரிவு தலைவர் ராதை காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story