எசனை துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒத்திவைப்பு


எசனை துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 20 Jun 2023 12:44 AM IST (Updated: 21 Jun 2023 3:25 PM IST)
t-max-icont-min-icon

எசனை துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டது.

பெரம்பலூர்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும், அதற்காக காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை அந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதியும், தவிர்க்க இயலாத காரணத்தினாலும், எசனை துணை மின்நிலையத்தில் இன்று நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது, என்று பெரம்பலூர் கிராமியம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story