காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு


காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
x

காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி ஒன்றியம், ஒலியமங்கலம் ஊராட்சியில் ஒலியமங்கலம், சுந்தம்பட்டி, வெள்ளாளப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, மடத்துப்பட்டி, சுரைக்காய்பட்டி, காயம்பட்டி பாலம், குழந்தாம்பட்டி ஆகிய சாலைகளை செப்பனிட வேண்டும். இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கூறி தாசில்தார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரசு அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை, தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அப்பகுதி பொதுமக்கள் இணைந்து உண்டு உறங்கி காத்திருக்கும் போராட்டம் ஒலியமங்கலம் பஸ் நிலையம் அருகே இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒலியமங்கலம் முதல் சேர்வைக்காரன்பட்டி, மடத்துப்பட்டி, சுந்தம்பட்டி, ஒலியமங்கலம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் தார்ச்சாலைகள் தொடர்பாக பிரதான் மந்திரி கிராம சதக்யோஜனா திட்டம் 2022-23 ஆண்டு திட்டத்தில் தேர்வு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு அரசிடம் நிலுவையில் உள்ளது. மேற்படி திட்ட மதிப்பீட்டின் பேரில் அரசாணை வரப்பெற்றவுடன் சாலை அமைக்கும் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். காயாம்பட்டி, வெள்ளாளப்பட்டி, சுரக்காய்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள சாலைகளில் நில அளவை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை வரும் ஆண்டுகளில் நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.


Next Story