பொங்கல் பரிசுடன் மண்பாண்டங்கள் வழங்க வேண்டும்
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் மண்பாண்டங்கள் வழங்க வேண்டும் என கலெக்டரிடம், மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மண்பானை, மண்அடுப்பு ஆகியவற்றுடன் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் லலிதாவிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பொங்கல் பண்டிகையின் போது குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு, அரிசி, சர்க்கரை, வேட்டி, சேலை உள்பட பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அழிந்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் மண்பாண்டங்களையும் வழங்க வேண்டும். இந்த மண்பாண்டங்களை தொழிலாளர்களிடமிருந்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் மண்பாண்டத்தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story