வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் விற்பனைக்கு வரும் மண்பாண்டங்கள்


வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் விற்பனைக்கு வரும் மண்பாண்டங்கள்
x
தினத்தந்தி 13 July 2023 6:45 PM GMT (Updated: 13 July 2023 6:45 PM GMT)

கோடை முடிந்தாலும் வெயிலின் தாக்கம் குறையாததால் வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் மண்பாண்டங்கள் விற்பனைக்கு வருகின்றன.

ராமநாதபுரம்

கோடை முடிந்தாலும் வெயிலின் தாக்கம் குறையாததால் வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் மண்பாண்டங்கள் விற்பனைக்கு வருகின்றன.

சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் கோடை வெயில் கடந்த மே மாதம் 29-ந் தேதி முடிவடைந்தது. ஆனால் இதன் பின்னரும் மாநிலம் முழுவதும் தொடர்கோடை முடிந்தாலும் வெயிலின் தாக்கம் குறையாததால் வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் மண்பாண்டங்கள் விற்பனைக்கு வருகின்றன.ந்து கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கத்தரி வெயில் காலத்திற்கு பின்னர் மழை பெய்து குளிர்ச்சியாகிய நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மழை என்பது கானல் நீராகவே உள்ளது. இதன் காரணமாக வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இளநீர், நுங்கு, தர்பூசணி, பதநீர் போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் நீர்ச்சத்து அதிகரிக்கும் உணவுகளை நாடி சென்று வருகின்றனர்.

இன்னும் சிலர் வீடுகளில் குளிர்சாதன பெட்டிகளில் குடிநீர் வைத்து ஜில்லென்று பருகி வருகின்றனர். குளிர்சாதன பெட்டியின் பாதிப்பை உணர்ந்த பொதுமக்கள் ஏழைகளின் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் மண் பானைகளில் குடிநீர் வைத்து குடிப்பதை அதிகம் விரும்பி வருகின்றனர்.

மண்பானை விற்பனை

கொரோனா காலத்திற்கு பின்னர் மக்களிடையே மண்பானைகளில் சமைத்து சாப்பிடுவதையும், மண்பானைகளில் குடிநீர் வைத்து குடிப்பதையும் அதிகம் விரும்பி வருகின்றனர். இதன் காரணமாக மண்பானை விற்பனை அதிகரித்து வருகிறது. தற்போதும் வெயிலின் தாக்கம் குறையாததால் மண்பானை விற்பனையும் குறையாமல் இருந்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மண்பானை விற்பனையும் சூடுபிடித்துள்ளது. நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வருவதால் மண்பானை விற்பனையாளர்கள் அதிகளவில் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்காக நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் இருந்து தரமான மண்பானைகள் உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. லாரிகளில் அதிக அளவில் ஏற்றி வரப்படும் மண்பானையை இங்குள்ள மண்பானை வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய்கின்றனர்.

போதிய விலை

இது குறித்து மண்பானை வியாபாரிகளிடம் கேட்டபோது, வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் மண்பானைகளை வாங்கி செல்கின்றனர். முன்பெல்லாம் பொங்கல் சமயத்தில் மட்டுமே மண்பானை விற்பனை அதிகளவில் இருக்கும். அதன் பின்னர் கத்தரி கோடை வெயில் காலத்தில் ஓரளவு விற்பனை இருக்கும். ஆனால் தற்போது பழமையை மக்கள் மீண்டும் விரும்பி வந்துள்ளதால் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது.

அதிக அளவு மண்பானை விற்பனை ஆனாலும் சரியான விலை கிடைக்காததால் அவதி அடைந்து வருகின்றோம் என்றார்.


Next Story