கோழிப்பண்ணையில் திருட முயன்ற 2 வாலிபர்கள் சிக்கினர்


கோழிப்பண்ணையில் திருட முயன்ற 2 வாலிபர்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே கோழிப்பண்ணையில் திருட முயன்ற 2 வாலிபர்கள் சிக்கினர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளி அருகே தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் நேற்று முன்தினம் 2 வாலிபர்கள் புகுந்து கான்கிரீட் இரும்பு சீட்டுகளை திருட முயன்றனர். சத்தம் கேட்டு கிராமமக்கள் வந்தனர். அவர்கள் 2 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசாருக்கு கிராமமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் சூளகிரி தாலுகா அலேசீபம் கிராமத்தை சேர்ந்த ஹரிஸ்குமார் (வயது 23), தினேஷ்குமார் (21), என்பதும், பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.


Next Story