கோழிப்பண்ணையில் தீ விபத்து; 2,500 கோழி குஞ்சுகள் கருகின
கோழிப்பண்ணையில் தீ விபத்து; 2,500 கோழி குஞ்சுகள் கருகின
வேலூர்
குடியாத்தத்தை அடுத்த ஏர்த்தாங்கல் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் தனது நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். நிலத்திலிருந்து சற்று தொலைவில் கோழி பண்ணை வைத்துள்ளார். இவரது கோழிப்பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணை முற்றிலும் எரிந்து நாசமாயின. அங்கிருந்த 15 நாட்களே ஆன 2,500 கோழி குஞ்சுகளும் கருகின. மேலும் 30 மூட்டை கோழி, தீவனம் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகின.
தீ விபத்து குறித்து லோகநாதன் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story