கோழி இறைச்சி விலை குறைந்தது
ஆடி மாதம் பிறந்ததால் கோழி இறைச்சி விலை குறைந்துள்ளது.
கோழி இறைச்சி
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் வாரத்தின் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் பெரும்பாலான வீடுகளில் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன் போன்ற அசைவம் எடுத்து சாப்பிடுவதை விரும்புவார்கள்.
இதனால் ஆடி மாதம் பிறப்பதற்கு முன்பு கோழி இறைச்சி விலை ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
விலை குறைந்தது
ஆடி மாதம் பிறந்ததையொட்டி கோழி இறைச்சி விலை குறைந்துள்ளது. இந்த மாதத்தில் இறைச்சி சாப்பிடுவதை பெரும்பாலோனார் தவிர்ப்பதுண்டு. சேலத்தில் நேற்று கோழி இறைச்சி (பிராய்லர்) ரூ.20 குறைந்து ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆடி மாதம் தொடங்கி உள்ளதால் கோவில் விழாக்கள் நடைபெறும். பக்தர்கள் விரதம் இருப்பார்கள்.
இதன் காரணமாக சேலத்தில் நேற்று இறைச்சி கடைகளில் வியாபாரம் குறைவாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.