கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசி முகாம்


கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசி முகாம்
x

கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசி முகாம்

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையினரால் இன்று முதல் 14-ந்தேதி வரை 2 வாரம் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் 2.75 லட்சம் டோஸ் கோழிக்கழிச்சல் தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 யூனியன் பகுதிகளிலும், 2 வார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் கிராமங்களில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலமாக நடத்த கால்நடை பராமரிப்புத்துறையினர் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர். கோழிகளை வளர்க்கும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கோழிக்கழிச்சல் தடுப்பூசிகளை கோழிகளுக்கு போட்டு பயனடைய அருகிலுள்ள கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளை அணுகி பயன்பெறுமாறு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story