குளத்தில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள்


குளத்தில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள்
x
தினத்தந்தி 26 Jun 2023 7:30 PM GMT (Updated: 27 Jun 2023 10:13 AM GMT)

கூடலூரில் குளத்தில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நீர் மாசுப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி

கூடலூர் நகரின் மையப்பகுதியில் மைத்திலை மண்ணடியான் குளம் என்று அழைக்கப்படும் ஒட்டாண் குளம் அமைந்துள்ளது. முல்லைப் பெரியாற்றிலிருந்து வைரவன் வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு குளத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதியில் இருபோக நெல் விவசாயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இந்த குளத்தில் உள்ள தண்ணீர் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தின் கரையோர பகுதியில் கோழி இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.

இதன் காரணமாக குளத்தில் நீர் மாசுப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை கால்நடைகள் குடிக்கும்போது நோய்தொற்று ஏற்படுகிறது. மேலும் இறைச்சி கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும்போது சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கோழி இறைச்சி கழிவுகளை ஒட்டாண் குளத்தின் கரைகளில் கொண்டு வந்து கொட்டுவதை தடுக்கவேண்டும். அவ்வாறு கொட்டுபவர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story