மரத்தின் அருகே குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது.


மரத்தின் அருகே குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது.
x

அரசு அலுவலகத்தில் மரத்தின் அருகே குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பு

கோயம்புத்தூர்

கோவை

கோவை ரேஸ்கோர்சில் துணை சுகாதாரத்துறை அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள மரங்களின் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது.

இதனால் அங்குள்ள 3- க்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்து கருகி பட்டுப்போய் விட்டன. இது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், மனிதனுக்கு சுத்தமான காற்றை கொடுப்பதில் மரங்களின் பங்கு முக்கியமானது. எனவே அதை பாதுகாக்க வேண்டும். ஆனால் மரங்களை வெட்டுவது,

மரத்தின் அருகே குப்பைகளை சேகரித்து தீ வைப்பது போன்ற செயல்களால் மரங்கள் பட்டுப் போய் விடுகிறது. அரசு அலுவலக வளாகத்திலேயே இது போன்று நடப்பது கவலை அளிக்கிறது.

எனவே இயற்கையை பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story