தோரணமலையில் பவுர்ணமி கிரிவலம்
தோரணமலையில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.
தென்காசி
கடையம்:
கடையம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி நேற்று பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் ஆனைமுக வடிவம் கொண்ட மலையை சுற்றியுள்ள சுமார் 6 கிலோமீட்டர் தூரம் உள்ள கிரிவல பாதையில் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு விவசாயத்திலும், மாணவர்கள் அறிவியலிலும், ஆளுமையிலும் சாதனை புரிந்து உலகம் போற்றும் இடத்திற்கு வரவேண்டியும், மழை வேண்டியும் தோரணமலை பக்தர்கள் சார்பில் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story