தோரணமலையில் பவுர்ணமி கிரிவலம்


தோரணமலையில் பவுர்ணமி கிரிவலம்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே தோரணமலையில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கடையம் அருகே உள்ள தோரணமலை அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் வழிபட்ட பெருமையுடையது. மலை மீது குகையில் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. பவுர்ணமி தோறும் தோரணமலையை சுற்றி கிரிவலம் நடந்து வருகிறது. புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற கிரிவலத்தில் திரளான பக்தர்கள் தோரணமலை முருகனுக்கு அரோகரா என சரண கோஷம் முழங்க பக்தி பஜனை பாடல்கள் பாடி சுமார் 4½ கிலோமீட்டர் சுற்றளவுள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். கிரிவலம் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ.செண்பகராமன் செய்திருந்தார்.


Next Story