திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது
இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது.
திருவண்ணாமலை,
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிப்படுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 9-ந் தேதி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை சுமார் 6.20 மணியளவில் தொடங்கி மறுநாள் 10-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் நிறைவு பெறுகின்றது. பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.