மின்வாரிய குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி, நெல்லை மாவட்டத்தில் மின்வாரிய குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
தென்காசி
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் தலைமையில் மின்சார வாரிய குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 6-ந்தேதி வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், 11-ந்தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும், 13-ந்தேதி நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 18-ந்தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 21-ந்தேதி நெல்லை நகர்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 25-ந்தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும் காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த தகவலை மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story