மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம்


மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம்
x

மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.

கரூர்

கரூரில் மாவட்ட மின்வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் 27-ம் ஆண்டு விழா கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜகோபால் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் 80 வயது நிறைவடைந்தவர்களுக்கு விண்ணப்பம் கொடுக்காமலேயே அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க, கணினியில் தக்க பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வாரிய ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும், மத்திய அரசு வழங்குவது போல் மருத்துவபடி ரூ.1000 வழங்க தக்க நடவடிக்கை எடுக்க சம்மேளனத்தை கேட்டு கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாளர் சின்னசாமி, இணை செயலாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story