சேலம்கோட்டை மாரியம்மன் கோவிலில் சக்தி அழைப்புஇன்று பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது


சேலம்கோட்டை மாரியம்மன் கோவிலில் சக்தி அழைப்புஇன்று பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது
x
சேலம்

சேலம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.

கோட்டை மாரியம்மன் கோவில்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடித்திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி இரவு 8.30 மணிக்கு கிச்சிப்பாளையத்தில் உள்ள நடராஜர் பஜனை மட பக்த ஜன சங்கத்தில் இருந்து சக்தி அழைப்பு தொடங்கியது. அதன்படி முக்கிய வீதிகள் வழியாக அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மேள, தாளம் முழங்க வாண வேடிக்கை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

பொங்கல் வழிபாடு

இன்று (செவ்வாய்க் கிழமை) பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது. இந்த பொங்கல் வழிபாடு தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். பெண்கள் பொங்கல் வைக்க வசதியாக கோவில் வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளன. பொங்கல் வைத்தல் தொடங்குவதை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஆடிப்பண்டிகையையொட்டி நாளை (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோட்டை மாரியம்மன் கோவிலில் சக்தி அழைத்தலை யொட்டி, குகை காளியம்மன், மாரியம்மன், அம்மாபேட்டை பலப்பட்டறை மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் நேற்று இரவு சக்தி அழைத்தல் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

1 More update

Next Story