விழுப்புரம் மண்டல மின் நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் கடலூரில் 27-ந் தேதி நடக்கிறது
விழுப்புரம் மண்டல மின் நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் கடலூரில் 27-ந் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக விழுப்புரம் மண்டலத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் கடலூர் கேப்பர்மலையில் உள்ள கடலூர் மின் பகிர்மான வட்ட தானியங்கி துணை மின் நிலைய வளாகத்தில் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.
கூட்டத்திற்கு விழுப்புரம் மண்டல தலைமை பொறியாளர் செல்வசேகர் தலைமை தாங்குகிறார். எனவே இக்கூட்டத்தில் மின்நுகர்வோர்கள், மின்வாரியத்துறை தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் 27-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்புமாறும், கூட்டத்தில் கலந்துகொண்டு அதுசம்பந்தமாக குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு 04142-223132, 223969 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த தகவலை விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளார்.