இன்று மின்சாரம் நிறுத்தம்
இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமேசுவரம்,
ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதையொட்டி செம்மமடம், மெய்யம்புளி, அரியாங்குண்டு, சந்தியாநகர், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.
சாயல்குடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் செவல்பட்டி மின்பாதையில் பராமரிப்பு பணி மேற் கொள்ளப் பட உள்ளது. இதையொட்டி செவல்பட்டி, எஸ். தரைக்குடி, பிள்ளையார்குளம், எம்.கரிசல்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப் படும் என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித் துள்ளார்.
Related Tags :
Next Story