மின் தடை
ஆலங்குளம், ஊத்துமலை பகுதிகளில் மின் தடை
தென்காசி
ஆலங்குளம்:
ஆலங்குளம், ஊத்துமலை மற்றும் கீழப்பாவூர் ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், ஐந்தாங்கட்டளை, குருவன்கோட்டை, அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், ஊத்துமலை, கீழக்கலங்கல், மேலமருதப்பபுரம், சோலைசேரி, கருவந்தா, கல்லத்திகுளம், ருக்குமணியம்மாள்புரம், கங்கணாங்கிணறு, கழுநீர்குளம், அடைக்கலபட்டணம், முத்துகிருஷ்ணபேரி மற்றும் பூலாங்குளம் ஆகிய இடங்களில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் வினியோக கழக நெல்லை (கிராமப்புறம்) செயற்பொறியாளர் அலெக்சாண்டர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story