போடி அருகே ராசிங்காபுரம் பகுதியில் 8-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
போடி அருகே ராசிங்காபுரம் பகுதியில் 8-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தேனி
போடி அருகே ராசிங்காபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டி.ரெங்கநாதபுரம் மின்தொடரிலும், தேவாரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மூனாண்டிபட்டி, பாரகான் மின்தொடர்களிலும் 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
இதையொட்டி பொட்டிப்புரம். ராமகிருஷ்ணாபுரம், டி.புதுக்கோட்டை, குப்பனாசாரிபட்டி, டி.திம்மிநாயக்கன்பட்டி, மூனாண்டிபட்டி, பாரகான் ஆகிய பகுதிகளில் 8-ந்தேதி காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story